Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 22 செப்டம்பர் (ஹி.ச.)
உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவிற்கு பிறகு வரும் இரண்டாம் தேதி வரை மண்டல பூஜை ஆனது நடைபெற்று வரக்கூடிய வேளையிலே கோவிலின் மேற்கு கோபுரம் மற்றும் தெற்கு கோபுரம் வாயிலாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் மட்டும் 75 ஆயிரம் பக்தர்களும் நேற்றைய தினம் 52 ஆயிரம் பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்த நிலையில் இன்று காலை 10 மணி நிலவரப்படி இரண்டு கோபுர வாயில் வழியாக சுமார் 10,000 மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் கைகளில் காவல்துறையினர் குழந்தையின் பெயர் பெற்றோரின் பெயர் மற்றும் பெற்றோரின் கைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய டாகுகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J