பழனி முருகன் கோயில் ரோப்கார் சேவை 64 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம்
திண்டுக்கல், 22 செப்டம்பர் (ஹி.ச.) பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த ரோப்கார் சேவை, 64 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து, இன்று காலை
Ropecar


திண்டுக்கல், 22 செப்டம்பர் (ஹி.ச.)

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கடந்த ஜூலை 20-ஆம் தேதி முதல் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த ரோப்கார் சேவை, 64 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

இதையடுத்து, இன்று காலை அடிவாரத்தில் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ரோப்கார் நிலையத்தில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பூசணிக்காய் உடைத்து ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டது.

பராமரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக கொல்கத்தாவிலிருந்து புதிய கயிறு பொருத்தப்பட்டு, தேவையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து தகுதிச் சான்று பெறப்பட்ட நிலையில், பக்தர்களின் பயன்பாட்டுக்காக ரோப்கார் சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக ரோப்கார் சேவை இல்லாததால், மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் வின்ச் ரயிலை பயன்படுத்தி வந்தனர்.

இதனால் குறிப்பாக முதியவர்கள் மற்றும் வயதான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது விரைவான ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால், மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், குறிப்பாக முதியவர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN