ரூ.46 கோடி காசோலை மோசடி புகார்- நடிகை ராதாவுக்கு செப்.24-ல் காவல்துறை விசாரணை
சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.) நடிகை அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது நடிகை ராதா அளித்துள்ள ரூ.46 கோடி காசோலை மோசடி புகார் தொடர்பாக, வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராதாவுக்கு போலீசார் அழைப்பு
காவல்


சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.)

நடிகை அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீது நடிகை ராதா அளித்துள்ள ரூ.46 கோடி காசோலை மோசடி புகார் தொடர்பாக, வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராதாவுக்கு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

ராதா அளித்த புகாரில், தனது வீட்டில் வைத்திருந்த பழைய கையெழுத்திட்ட காசோலைகளில் 5 காசோலைகள் தனது அனுமதியின்றி எடுக்கப்பட்டு, அம்பிகா பெயரில் சுமார் ரூ.46 கோடி பெற முயற்சி செய்யப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து வங்கியை தொடர்புகொண்டு அந்த காசோலைகளுக்கான பணப் பரிவர்த்தனையை நிறுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரில் அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மல்லிகார்ஜுன் குஞ்சன் நாயர் மீது ராதா குற்றம்சாட்டியுள்ளார். புகார் தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் தற்போது ராதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனிடையே, ராதாவின் குற்றச்சாட்டுகளை அம்பிகா மறுத்துள்ளார்.

குடும்ப சொத்து மற்றும் பிற விவகாரங்கள் தொடர்பாக ஏற்கனவே தாம் புகார் அளித்துள்ளதாகவும், ராதா குறிப்பிட்ட காசோலைகள் இருவருக்கும் இடையிலான சமரசத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டவை என்றும் அம்பிகா விளக்கம் அளித்துள்ளார்.

இருதரப்பினரும் மாறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், காவல்துறை விசாரணைக்குப் பின்னரே புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P