Enter your Email Address to subscribe to our newsletters

மகாராஷ்டிரா, 22 செப்டம்பர் (ஹி.ச.)
மகாராஷ்டிராவை சேர்ந்த ரயில்வே நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் கடந்த மே மாதம், விஐபி அறையில் உள்ள சோபாக்களில் மூட்டைப்பூச்சிகள் இருப்பதாக நாந்தேட் கோட்ட ரயில்வே மேலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
மேலும், பழைய சோபாக்களை மாற்றி, அறையில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த உத்தரவுகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும், தொடர்ந்து அதே சோபாக்களில் மூட்டைப்பூச்சிகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு நீதிபதி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நீதிபதிகள் அமரும் அறையிலேயே இத்தகைய மோசமான சுகாதார நிலை தொடர்வது குறித்து நோட்டீஸில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரவைப் பின்பற்றாதது தொடர்பாக அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P