புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரி செப்.29-ல் மீனவர்கள் போராட்டம்
சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை முள்ளிக்குப்பம் பகுதியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்க தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண் 564-ஐ ரத்து செய்யக் கோரி, செப்டம்பர் 29-ஆம் தேதி சென்னை மாவட்ட மீனவர்கள் சார்பில் மாபெரும் கண்ட
போராட்டம்


சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை முள்ளிக்குப்பம் பகுதியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்க தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண் 564-ஐ ரத்து செய்யக் கோரி, செப்டம்பர் 29-ஆம் தேதி சென்னை மாவட்ட மீனவர்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

முள்ளிக்குப்பம், முள்ளிமாநகர் மற்றும் மயிலாப்பூர் பகுதி மீனவ கிராமப் பஞ்சாயத்து சபைகள் கூட்டாக எடுத்துள்ள இந்த முடிவில், சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் தலைமைச் செயலக வளாகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பல தலைமுறைகளாக மீனவர்கள் வசித்து வரும் அந்த நிலத்தை அவர்களின் பாரம்பரியக் குடியிருப்புப் பகுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 21-ஆம் தேதி வரை அரசுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் எந்த அறிவிப்பும் வெளியாகாததால், செப்டம்பர் 29-ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மீனவ கிராமப் பஞ்சாயத்துகள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P