Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 22 செப்டம்பர் (ஹி.ச.)
1980-ஆம் ஆண்டு சோனியா காந்தியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது தொடர்பான புகாரை மீண்டும் விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
1980-ஆம் ஆண்டு சோனியா காந்தி இந்திய குடியுரிமை பெறவில்லை எனக் கூறப்படும் நிலையில், அவர் எப்படி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி,
சோனியா காந்தி வாக்காளர் பட்டியலில் இடம்பெற போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
எனினும், சோனியா காந்தி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் எந்தத் தீர்ப்பையும் வழங்கவில்லை. முந்தைய உத்தரவை ரத்து செய்து, புகாரை சட்டப்படி மீண்டும் பரிசீலிக்க மட்டுமே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P