தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக ஆர்பாட்டம்
திருப்பத்தூர், 22 செப்டம்பர் (ஹி.ச.) திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வீரபத்திர முதலியார் பூங்கா அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த ஈசன் முருகசாமி என்பவ
க


திருப்பத்தூர், 22 செப்டம்பர் (ஹி.ச.)

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வீரபத்திர முதலியார் பூங்கா அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த ஈசன் முருகசாமி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகந்தசாமி என்கிற விவசாயி மரணத்தை வைத்து கரூர் மாவட்டம் வாங்கல் அருகில் உள்ள முனியப்பனூர் என்கிற கிராமத்தில் திருப்பூரை சேர்ந்த தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த ஈசன் முருகசாமி என்பவர் தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த யாரும் கடன் வசூலிக்க வந்தால் செருப்பால் அடிக்க வேண்டும் என்றும் செருப்பால் அடிக்கும் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கூட்டுறவு சங்கத்தில் செருப்பை வீச வேண்டும் என்றும் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த பணியாளர்களை மிகவும் அவமானப்படுத்தும் விதமாகவும் மிரட்டும் விதமாகவும் பேட்டி அளித்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இதனால் கூட்டுறவு சங்கத்திற்கும் விவசாய சங்கத்திற்கும் மேலும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே அவர் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டு கண்டன உரைகள் நடைபெற்றன.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட முழுவதும் உள்ள தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / Durai.J