Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 22 செப்டம்பர் (ஹி.ச.)
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் உள்ளக குழு தொடக்க விழா நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தார்.
அமைச்சர் பேச்சை தொடங்கிய சுமார் 5 நிமிடங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டது.
இருப்பினும் அமைச்சர் தனது பேச்சை தொடர்ந்து மேற்கொண்டார். இதனால் அங்கிருந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அமைச்சர் தனது பேச்சை முடித்தபோது,
மின்தடை ஏற்பட்டதும் இதுதானே செய்தி என நகைச்சுவையாகக் குறிப்பிட்டு சென்றார்.
இதேபோல் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் விஜய் சரவணனும் அமைச்சர் பேசும்போது மின்தடை ஏற்பட்டதை நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
இதனிடையே, கல்லூரியில் மின்வெட்டு ஏற்படவில்லை என்றும், அங்குள்ள மின்சார பாதுகாப்பு அமைப்பில் உள்ள ஃபியூஸ் கேரியர் பழுதடைந்ததால் மட்டுமே மின்சாரம் தடைபட்டதாகவும் அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே இதனை மின்வெட்டு என செய்தியாக வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P