Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 22 செப்டம்பர் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ராஜீவ் காந்தி மைதானத்தில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடைப்பந்து இறகுப்பந்து கைப்பந்து ஓடுதளம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை மாணவர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கும் போட்டிகள் நடைபெறுவதற்கும் ஏதுவாக கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் பணிகள் துவங்கப்பட்டு கட்டிடப் பணிகள் முடிவடைந்து ஓடுதள பாதை படிகள் நடை பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் மாவட்ட நவீன விளையாட்டு அரங்கம் மது பிரியர்களின் கூடாரமாக மாறிவிடுவதாக செய்திகள் வெளியான நிலையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருப்பதி உடனடி ஆய்வு மேற்கொண்டு விளையாட்டு அரங்கத்தின் பொறியாளரிடம் விளக்கம் கேட்டு உடனடியாக பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின் போது நகராட்சி ஆணையர் வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர்
Hindusthan Samachar / Durai.J