போளூர் மஞ்சள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருவண்ணாமலை, 22 செப்டம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் திருவண்ணாமலை, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ராணிப்பேட்டை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் போளூர், ஜமுனாமுத்தூர், ஆர
Flood


திருவண்ணாமலை, 22 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் திருவண்ணாமலை, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ராணிப்பேட்டை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் போளூர், ஜமுனாமுத்தூர், ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பிற்பகலில் கனமழை பெய்யத் தொடங்கியது.

போளூர், ஜமுனாமரத்தூர், அத்திமூர், பெரியகரம், பட்டறைகாடு, சேத்பட், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதியில் அதிக கன மழை பொழிந்தது.

தொடர்ந்து பெய்த கனமழையால் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் பட்டறைகாடு என்ற இடத்தில் உருவாகக்கூடிய மஞ்சள் ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு மழை குறைவாக இருந்த நிலையில், தற்போது இந்த 3 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் மஞ்சள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர மக்களுக்கு வருவாய்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN