மூதாட்டி வீட்டில் உணவு அருந்தி குறைகளை கேட்டறிந்த அமைச்சர் என். ஆனந்த்
மதுராந்தகம், 22 செப்டம்பர் (ஹி.ச.) மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மரகதம் குமரவேல்
H


மதுராந்தகம், 22 செப்டம்பர் (ஹி.ச.)

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மரகதம் குமரவேல் தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அச்சரப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட பாதிரி கிராமத்தில் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, அப்பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குச் சென்ற அவர், அங்கு அவருடன் அமர்ந்து உணவு மற்றும் தண்ணீர் அருந்தினார். தொடர்ந்து, மூதாட்டியிடம் குடும்ப நிலை, அப்பகுதி மக்களின் தேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

அமைச்சர் என். ஆனந்த், மூதாட்டியின் வீட்டிற்குச் சென்று அவருடன் இயல்பாக அமர்ந்து உணவு அருந்தி, குறைகளை கேட்டறிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பாதிரி கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்த என். ஆனந்த், மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.

Hindusthan Samachar / Durai.J