வீரமணி வழக்கை தேர்தல் அரசியலாக்கக் கூடாது - பா.ஜ.க மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம்
சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.) வீரமணி தொடர்பான வழக்கை திமுக–தவெக இடையேயான இடைத்தேர்தல் அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது என பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள் பாலியல் சுர
Vinoj P.Selvam


Hb


சென்னை, 22 செப்டம்பர் (ஹி.ச.)

வீரமணி தொடர்பான வழக்கை திமுக–தவெக இடையேயான இடைத்தேர்தல் அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது என பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குழந்தைகள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் இருந்தும், இந்த வழக்கு ஏன் நீண்ட காலமாக முன்னேறாமல் இருந்தது என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வீரமணி, அவருக்கு உதவியதாகக் கூறப்படும் நபர்கள், பணப்பரிமாற்றங்கள் மற்றும் வழக்கின் ஆதாரங்களை மறைத்ததாகக் கூறப்படும் அதிகாரிகள் என அனைத்து தரப்பினர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்களை வெளிக்கொண்டு வந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு நீதி கிடைப்பதே முக்கியம் என்றும், இந்த விவகாரத்தை தேர்தல் பிரசாரத்துக்கான அரசியல் விவகாரமாக மாற்றக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ