ஆபத்தான நிலையில் கிளை அஞ்சல் நிலையம் -சீலிங்கை முட்டுக்கொடுத்து நிறுத்திய அவலம்
வேலூர், 22 செப்டம்பர் (ஹி.ச.) வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட 2-வது வார்டு பள்ளிக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கிளை அஞ்சல் நிலையம், போதிய பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக மோசமான மற்றும் ஆபத்தான நிலையில் செயல்பட்டு வருவதாக பொதுமக்
Hh


வேலூர், 22 செப்டம்பர் (ஹி.ச.)

வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட 2-வது வார்டு பள்ளிக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் கிளை அஞ்சல் நிலையம், போதிய பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக மோசமான மற்றும் ஆபத்தான நிலையில் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த அஞ்சல் நிலையத்தின் நுழைவு வாயிலை மறிக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதால், அஞ்சல் நிலையத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும், கட்டிடத்தின் சீலிங் பல இடங்களில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.

சேதமடைந்த சீலிங்கை சீரமைப்பதற்கு பதிலாக, இரும்புக் கம்பிகளை முட்டுக்கொடுத்து தற்காலிகமாக தாங்கி நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், அஞ்சல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மட்டுமின்றி அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.

பல ஆண்டுகளாக இதே நிலையில் அஞ்சல் நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்கவும், நுழைவு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் பிரச்சினைக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ