விஜயவாடாவில் சுட்டெரிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
ஆந்திரா, 22 செப்டம்பர் (ஹி.ச.) ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கோயில் அன்னதானத்திற்காக தயார் செய்யப்பட்ட சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஜயவாடா விநாயகர் கோயிலில் நடைபெற்ற அன்னதான விழாவில், சிட்டி நகர்
பலி


ஆந்திரா, 22 செப்டம்பர் (ஹி.ச.)

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கோயில் அன்னதானத்திற்காக தயார் செய்யப்பட்ட சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விஜயவாடா விநாயகர் கோயிலில் நடைபெற்ற அன்னதான விழாவில், சிட்டி நகர் பகுதியைச் சேர்ந்த சுஜாதா (46) என்பவரும் சமையல் பணிகளில் பங்கேற்றுள்ளார். அன்னதானத்திற்காக தயாரிக்கப்பட்ட சாம்பார் பாத்திரத்தை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சுஜாதா நிலைதடுமாறி கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த சுஜாதாவை குடும்பத்தினர் உடனடியாக விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான காட்சிகள் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. சாம்பார் பாத்திரத்தை இறக்கும் போது சுஜாதா நிலைதடுமாறி விழும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான காரணம் மற்றும் அன்னதான விழா ஏற்பாடுகளில் ஏதேனும் அலட்சியம் ஏற்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam