இந்தியா–ஜப்பான் டி20 போட்டி - டாஸ் தாமதம்
டோக்கியோ , 22 செப்டம்பர் (ஹி.ச.) இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா–ஜப்பான் அணிகள் இடையே ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டி நடைபெறுகிறது. இந்தியா–ஜப்பான் இடையே தூதரக உறவு ஏற்பட்டு 75 ஆண
A


டோக்கியோ , 22 செப்டம்பர் (ஹி.ச.)

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா–ஜப்பான் அணிகள் இடையே ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டி நடைபெறுகிறது.

இந்தியா–ஜப்பான் இடையே தூதரக உறவு ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

இரு அணிகளும் சர்வதேச டி20 போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த போட்டி ஜப்பானின் டொச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்க இருந்தது.

இந்த நிலையில், மைதானத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வானிலை சீரானதும் காலை 9.45 மணிக்கு டாஸ் சுண்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA