Enter your Email Address to subscribe to our newsletters

உசிலம்பட்டி, 22 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னையில் இன்று காலை உணவு விரிவாக்க திட்டத்தை
6 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தொடங்கி வைத்த சூழலில்,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிக்கம் உசிலம்பட்டி வட்டார வளர்ச்சி ஆணையாளர் ஜெயராம், துணை வட்டார சத்துணவு மேலாளர் கனிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உணவுகளை பரிமாறி திட்டத்தை துவக்கி வைத்தனர்.
இதில் பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J