Enter your Email Address to subscribe to our newsletters

அகமதாபாத் , 23 செப்டம்பர் (ஹி.ச.)
அகமதாபாத்தின் கோட்டா பகுதியில் கல்லூரிக்கு செல்வதற்காக பிரேர்னா நினமா (19) என்ற மாணவி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த ஹைட்ராலிக் கிரேன் எதிர்பாராதவிதமாக மாணவி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பிரேர்னா நினமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய பின்னர் கிரேன் டிரைவர் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த அகமதாபாத் ‘ஏ’ பிரிவு போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோலோ சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கிரேன் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், சோலோ பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் கிரேன் டிரைவர் அருண்குமார் நிஷாத் (26) என்பவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA