உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமோக வெற்றி பெற வேண்டும்- அமைச்சர் லோகேஷ்
விஜயவாடா , 23 செப்டம்பர் (ஹி.ச.) ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதத்திலேயே நடைபெறும் என்றும், தேர்தலை சந்திக்க கூட்டணி அரசு முழுமையாக தயாராக இருப்பதாகவும் மாநில அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்தார். விஜயவாடாவில் அமைச்சர்களுடன் நடைபெற
A


விஜயவாடா , 23 செப்டம்பர் (ஹி.ச.)

ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதத்திலேயே நடைபெறும் என்றும், தேர்தலை சந்திக்க கூட்டணி அரசு முழுமையாக தயாராக இருப்பதாகவும் மாநில அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்தார்.

விஜயவாடாவில் அமைச்சர்களுடன் நடைபெற்ற சிறப்பு காலை உணவு கூட்டத்தில் அவர் பேசினார்.

அப்போது, உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது என்ற எந்தவிதமான சந்தேகமும் யாருக்கும் வேண்டாம் என்று கூட்டணி கட்சியினருக்கு அவர் தெளிவுபடுத்தினார்.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள விவகாரங்களுக்கு விரைவாக தீர்வு காணப்பட்டு, அனைத்து இடங்களிலும் உள்ளாட்சி தேர்தலை திறம்பட நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக லோகேஷ் கூறினார்.

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தயாராக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவும், கட்சி மேலிடமும் உரிய முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

முந்தைய ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் ஒவ்வொன்றாக ஆதாரங்களுடன் வெளிவந்து கொண்டிருப்பதால், மக்களின் கவனத்தை திசைதிருப்ப ‘கோடாரி கட்சி’ மெகா டி.எஸ்.சி. தேர்வு மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக லோகேஷ் குற்றம்சாட்டினார்.

விஜயவாடா ஷாப் அலுவலகம் அருகே விளையாட்டு ஒதுக்கீட்டு ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், போலீசார் சட்டப்படி வழக்குப்பதிவு செய்ததும் தலைமறைவாகி விட்டதாக அவர் விமர்சித்தார்.

ஆசிரியர்களின் சுயமரியாதையை பாதிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் லோகேஷ் எச்சரித்தார்.

மேலும், ஆந்திரா முழுவதும் பரவலாக மழை பெய்து வருவது நல்ல அறிகுறி என்று அவர் கூறினார்.

மழையால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அமைச்சர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நீர்த்தேக்கங்களை முழு கொள்ளளவுக்கு நிரப்புவதற்கும் இந்த மழை சாதகமாக இருக்கும் என்று லோகேஷ் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA