விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.) மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் கலந்த குடும்பக் கதையான ''அப்பா குட்டி'' திரைப்படம், அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகின்றது. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ''அப்பா குட
க


சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)

மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் கலந்த குடும்பக் கதையான 'அப்பா குட்டி' திரைப்படம், அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகின்றது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'அப்பா குட்டி' திரைப்படம், ஆக்ஷன், குடும்ப உணர்வுகள் மற்றும் பாசத்தை மையமாகக் கொண்ட படமாக உருவாகி இருக்கின்றது.

ஒரு அப்பாவுக்கும் அவரது மகளுக்கும் இடையிலான ஆழமான பாசமும், அவர்களுக்குள் இருக்கும் வலுவான உறவும்தான் இந்தப் படத்தின் முக்கியமான கதைக்களமாக அமைந்துள்ளது.

விஜய் ஆண்டனி இந்தப் படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்திலும், ஆக்ஷன் நிறைந்த காட்சிகளிலும் நடித்து இருக்கின்றார்.

குடும்ப பாசம், உணர்ச்சிகள், விறுவிறுப்பான காட்சிகள் என அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே வெளியான படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டரில் விஜய் ஆண்டனியுடன் ஒரு சிறுமி இடம் பெற்றிருந்தார்.

இந்த போஸ்டர், அப்பா மற்றும் மகளுக்கு இடையிலான பாசமான உறவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அக்டோபர் 16 வெளியீட்டை முன்னிட்டு படக்குழு விரைவில் தீவிரமான புரமோஷன் பணிகளை தொடங்க இருக்கின்றது.

அன்பு, குடும்ப உணர்வு மற்றும் ஆக்ஷன் கலந்த கதையுடன் உருவாகியுள்ள விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி',அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகின்றது.

Hindusthan Samachar / Durai.J