Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)
கடந்த 2021 தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு
4-ல் வென்ற பாஜக, 2026 சட்டமன்ற தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்டு உதகமண்டலம் தொகுதியில் மட்டும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
2 சதவீத வாக்கில் இருந்து 11 சதவீதத்தை எட்டிவிட்டோம், தேசிய அளவில் முதன்மை கட்சியாக உள்ளோம் என்ற நம்பிக்கையோடு இருந்த பாஜக, 2026 சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியையும் அழைத்துவந்து பல இடங்களில் பிரச்சாரம் செய்தது. ஆனாலும், அதனையெல்லாம் தாண்டியில் விஜய்யின் அலையில் சிக்கி பாஜக படு தோல்வியைச் சந்தித்தது.
முக்கியமாக அக்கட்சி கடந்த முறை வென்ற நாகர்கோவில், மொடக்குறிச்சி தொகுதிகளில் இம்முறை தோல்வியை சந்தித்துள்ளது.
அதேபோல கோவை வடக்கில் போட்டியிட்ட வானதி சீனிவாசனும் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். சாத்தூரில் நயினார் நாகேந்திரனும் தோல்வியடைந்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி செல்ல உள்ளார்.
கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அவரை டெல்லி மேலிடம் அழைத்துள்ளதாக பாஜக நிர்வாகிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மத்திய பாஜக தலைமையுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழகத்தில் கட்சியின் தற்போதைய நிலை, நிர்வாகிகள் நியமனம், வரவிருக்கும் தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி தொடர்பான விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது தமிழக பாஜகவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b