இளைஞரிடம் ரூ.5 லட்சம் மிரட்டி பறிப்பு - பிக் பாஸ் பிரபலம் நடிகை வர்ஷினி கைது
சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.) சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தன்னை மிரட்டி தன்னிடமிருந்த செல்போன்கள் மற்றும் ரூபாய் 5 லட்சம் பணத்தை சிலர் பறித்துச் சென்றதாக தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில்
இளைஞரிடம் ரூ.5 லட்சம் மிரட்டி பறிப்பு - பிக் பாஸ் பிரபலம் நடிகை வர்ஷினி கைது


சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தன்னை மிரட்டி தன்னிடமிருந்த செல்போன்கள் மற்றும் ரூபாய் 5 லட்சம் பணத்தை சிலர் பறித்துச் சென்றதாக தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இந்த மிரட்டல் மற்றும் பணப்பறிப்பு சம்பவத்தில் பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான வர்ஷினிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

குறும்படம் எடுக்க முதலீடு செய்யுங்கள் எனக் கூறி, அந்த இளைஞரிடமிருந்து வர்ஷினி மற்றும் அவரது தரப்பினர் பணம் பறித்ததாகப் புகார் எழுந்துள்ளது.

ஏற்கனவே ரூ. 5 லட்சம் பறித்த நிலையில், கூடுதலாக ரூ. 27 லட்சம் கேட்டு தங்களை மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடிகை வர்ஷினியை சென்னை கிண்டி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சஞ்சய் உள்ளிட்ட மேலும் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட வர்ஷினியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளைஞரிடம் பணம் பறிக்கப்பட்டதற்கான காரணம் என்ன, இதன் பின்னணியில் வேறு ஏதேனும் தகராறு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b