மாநகராட்சி ஆணையர்கள் நேரில் ஆஜராக உத்தரவு
சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை, கோவை, ஈரோடு மாநகராட்சி ஆணையர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி தொடர்பான வழக்குகளில் மாநகராட்சிகள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத
சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை, கோவை, ஈரோடு மாநகராட்சி ஆணையர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்து வரி தொடர்பான வழக்குகளில் மாநகராட்சிகள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வு தொடர்பாக பல்வேறு மாநகராட்சிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்குகளில் மாநகராட்சிகள் சார்பில் பதிலளிக்க பலமுறை அவகாசம் வழங்கப்பட்டும், மாநகராட்சிகள் சார்பில் யாரும் ஆஜராகவில்லை என நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

இதையடுத்து, ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் செப்டம்பர் 29-ம் தேதியும், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் செப்டம்பர் 29-ம் தேதியும், கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா செப்டம்பர் 30-ம் தேதியும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam