Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 23 செப்டம்பர் (ஹி.ச.)
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த காலிங்கராயன் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க சார்பில் விவசாயிகள் 30க்கும் மேற்பட்டோர் ஒரு போக பாசத்தில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.
அதற்கு முன்பாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த மனுவில் வருடம் தோறும் ஜூன் 16 முதல் ஏப்ரல் 30 வரை 315 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.
இது கடந்த 750 ஆண்டு கால நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த வருடம் அணையில் நீர் இருப்பு குறைவு காரணனாக எங்களுக்கு உயிர் தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது.
இது எங்கள் சாகுபடிக்கு போதுமானதாக இல்லை தற்போது அனைத்து பாசனங்களு உயிர் தண்ணீர் திறந்தது போக மீதி இருக்கும் 1.5 டிஎம்சி தண்ணீர், தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் பவானிஆற்றில் வரும் கசிவு நீர் இரண்டையும் கலந்து வழங்கினால் எங்களுக்கு கிட்டத்தட்ட ஒரு போகத்திற்கு வழங்க முடியும்.
தண்ணீர் வழங்க முடியாத சூழல் இருந்தாலும் முறை வைத்தாவது காலிங்கராயர் வாய்க்காலுக்கு தண்ணீரை வழங்க வலியுறுத்தி மனுவில் தெரிவித்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN