காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம்
ஈரோடு, 23 செப்டம்பர் (ஹி.ச.) காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக்கோரி, மாவட்ட
Hh


ஈரோடு, 23 செப்டம்பர் (ஹி.ச.)

காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக்கோரி, மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

அணையில் பாசனத்துக்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பதாகவும், எனவே காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஆனால், இதுவரை தண்ணீர் திறப்பது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் தேதியை அதிகாரிகள் அறிவிக்கும் வரை, தினமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுத்து தங்களது குடும்பத்தை காப்பாற்றும் போராட்டத்தை தொடரப்போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ