Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)
சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹம் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து ஆகஸ்ட் 29ஆம் தேதி கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் வீரமணியின் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தில் சுமார் 23 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த அவரது உதவியாளர் கணேசன் என்பவர் குறித்தும் காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்தன.
அந்த கணேசன், ஜெம் நிறுவனத்தில் இருந்து விலகி, பாலாஜி குளோபல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வருகிறார் என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இவ்வழக்கில், ஜெம் வீரமணி சிறுமிகளுடன் இருக்கும் வீடியோ ஆதாரங்களை மறைத்ததாகக் கூறி கணேசன் கைது செய்யப்பட்டார்.
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் முக்கிய ஆதாரங்களை அழிக்கவும், மறைக்கவும் முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கணேசன், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணேசனை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Hindusthan Samachar / vidya.b