குருவையும் பெற்றோரையும் சமூகத்தையும் மறக்காதீர்கள் - மாணவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் அறிவுரை
சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் அர்லேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி உரை
குருவையும் பெற்றோரையும் சமூகத்தையும் மறக்காதீர்கள் - மாணவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் அறிவுரை


சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக ஆளுநர் அர்லேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், உங்களுக்கு கல்வி, அறிவு, ஒழுக்கம் என அனைத்தையும் கொடுத்த குருவையும், பெற்றோரையும் வாழ்நாளில் என்றும் மறக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.

பெற்றோரின் தியாகமும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும்தான் ஒரு மாணவனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறது என்று குறிப்பிட்டார்.

மேலும், ஒரு தனி மனிதனின் வெற்றிக்கு பின்னால் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரின் பங்களிப்பும் உள்ளது.

எனவே நீங்கள் வளர வளர சமூகத்தை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. சமூகத்திற்கு திருப்பி கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

மாணவர்கள் வெறும் வேலை தேடுபவர்களாக மட்டும் இருந்துவிடக் கூடாது, வேலை கொடுப்பவர்களாக உருவாக வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

சொந்தமாக நிறுவனங்களை தொடங்கி, புதிய பாதைகளை உருவாக்கி, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக திகழ வேண்டும். இதற்கு மிக முக்கியமான தேவை மன உறுதியும், தன்னம்பிக்கையும்தான் என்று அவர் கூறினார்.

2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற நாட்டின் மாபெரும் இலக்கை அடைவதில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது.

இன்று பட்டம் பெறும் நீங்கள்தான் அந்த வளர்ந்த பாரதத்தின் தூண்கள் என்று கூறி தனது உரையை ஆளுநர் நிறைவு செய்தார்.

Hindusthan Samachar / vidya.b