Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)
ஜெம் வீரமணி தொடர்புடைய பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
ஜெம் வீரமணி தொடர்புடைய பாலியல் வழக்கை முறையாக விசாரிக்காமல், அவரை வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க முயற்சித்த அதிகாரிகள் மற்றும் அரசியல் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க, ஜெம் வீரமணி தொடர்புடைய வழக்கில் தமிழக அரசு மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளும், நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களும் முழுமையானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போதுதான் இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பும், தண்டனையும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை பாடமாக அமையும் என்றும் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெம் வீரமணி வழக்கில் தமிழக அரசு மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கை பாரபட்சமற்றதாகவும், பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு நீதி வழங்கும் வகையிலும் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் விஜய்யை வலியுறுத்துவதாகவும் ஹெச். ராஜா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ