இந்தியன் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி -  டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்
சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.) திட்டமிடப்பட்டுள்ள வங்கி வேலைநிறுத்தம் காரணமாக செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. இதையடுத்து, வாடிக்கையாளர்கள் தங்களது அத்தியாவசிய வங்கிப்
Indian


Vv


சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)

திட்டமிடப்பட்டுள்ள வங்கி வேலைநிறுத்தம் காரணமாக செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

இதையடுத்து, வாடிக்கையாளர்கள் தங்களது அத்தியாவசிய வங்கிப் பணிகளை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. அதில்,

வேலைநிறுத்தம் காரணமாக குறிப்பிட்ட நாட்களில் வங்கிக் கிளைகளில் வழக்கமான சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அவசரமான பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற வங்கித் தேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் மொபைல் பேங்கிங், ஏடிஎம் மற்றும் இதர டிஜிட்டல் வங்கி சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வங்கிக் கிளைகளுக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய தேவையைத் தவிர்க்கும் வகையில், முடிந்தவரை தேவையான பரிவர்த்தனைகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுமாறும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கி வேலைநிறுத்தம் காரணமாக எந்தெந்த சேவைகள் எவ்வளவு நேரம் பாதிக்கப்படும் என்பது குறித்து வங்கிகளின் செயல்பாட்டைப் பொறுத்து மாற்றங்கள் இருக்கலாம் என்பதால், வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்தி தங்களது அத்தியாவசிய வங்கிப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ