Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ , 23 செப்டம்பர் (ஹி.ச.)
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா மேற்கு பகுதியை சேர்ந்தவர் நீரஜ் (40). சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
இவர் தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் பிஸ்காரா பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்திசையில் வேகமாக வந்த சொகுசு கார், நீரஜ் மற்றும் அவரது மனைவி சென்ற ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட நீரஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயமடைந்தார்.
விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரின் டிரைவர் அங்கிருந்து தப்பி தலைமறைவானார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA