Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 23 செப்டம்பர் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த நல்லேந்திரன் மற்றும் ஆனந்த் ஆகியோரது வீடுகளிலேயே இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.
வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றிருந்த நேரத்தை நோட்டமிட்ட மர்ம கும்பல், இரண்டு வீடுகளின் பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்துள்ளது.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த 19 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வீடு திரும்பிய உரிமையாளர்கள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அப்புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த திருவெறும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b