Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் விஜய் தீவிர பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி முதல்கட்ட பரப்புரையாக வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்திற்காக தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக அக்டோபர் 2-ஆம் தேதி மதுராந்தகம் நகரம் மற்றும் முக்கிய ஒன்றிய பகுதிகளில் தனது பிரத்யேக பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே எழுச்சிமிகு ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிக்க உள்ளார்.
இதேபோல் தாராபுரம் தொகுதியில் வரும் 30-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தாராபுரம் மாருதி நகர் பகுதியில் 54 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்டத்திற்கான பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மொத்தமாக இரண்டு தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் வீதம் 4 நாட்கள் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b