ராஜினாமா செய்தவர்களுக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பு கொடுத்திருக்கக் கூடாது - கார்த்தி சிதம்பரம் பேட்டி
மதுரை, 23 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தேர்தல் ஆணையத்தில் ஒரே ஒரு தேர்தல் ஆணையர் தன்னிசையாக முடிவு எடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் மூன்று தேர
Karti Chidambaram


மதுரை, 23 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

தேர்தல் ஆணையத்தில் ஒரே ஒரு தேர்தல் ஆணையர் தன்னிசையாக முடிவு எடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் மூன்று தேர்தல் ஆணையர்களை நியமித்தார்கள்.

தலைமை தேர்தல் ஆணையர் புகை இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமித்தார்கள்.

ஆனால் இன்று வந்த செய்தியில் பார்ம் சிக்ஸ் மாற்றத்திற்கு இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

மூன்று நான்கு முறை மம்தா பானர்ஜி சின்னத்தை முடக்கி இருக்கிறார்கள். முதல்வராக இருந்த கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள், அமைச்சர் ஜெய்சங்கருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.

புதிய வாக்காளர்களின் தாய் தந்தை தாத்தா பாட்டி வாக்காளர்களாக இருக்கிறார்களா என கேள்வி கேட்டு அவர்களை நீக்குவதற்காக முயற்சி செய்கிறார்கள்.

தேர்தல் மீது சந்தேகம் வந்து விடுகிறது இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் இதில் நீடிக்க கூடாது. அவர் நடத்தைக்கு எதிராக 14 முறை தேர்தல் ஆணையர்கள் புகார் அளித்தும் அரசு செவி சாய்க்கவில்லை.

இந்தியாவில் நடைபெறும் தேர்தல் உண்மையிலேயே ஜனநாயக அடிப்படையில் நடைமுறை இருக்கிறதா? என கேள்விக்குறியாக உள்ளது.

ஒரு முறை வரி விதிக்க பழகிவிட்டால் எல்லா விதத்திலும் வரிவிதிப்பார்கள். கடை நடத்துபவர்கள் பணம் கொடுப்பதாக சொல்கிறார்கள் ஆனால் அதை அவர்கள் கட்ட மாட்டார்கள் நுகர்வோர் தான் கட்டுவார்கள்.

வீரமணி வழக்கு தொடர்பான கேள்விக்கு?

பத்திரிக்கையில் வரும் செய்தியை வைத்து நான் கருத்து சொல்கிறேன். விசாரணை நடைபெறுகிறது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள். கடந்த ஆட்சியில் அரசியல் என்பதை விசாரணைக்கு பிறகு தான் சொல்ல முடியும்.

இடைத்தேர்தலில் ராஜினாமா செய்தவர்களையும் மீண்டும் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு?

என்னுடைய கருத்து வேறுபட்டது தான். ராஜினாமா செய்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கக் கூடாது. இதை நான் ஒத்துக்கொள்கிறேன்.

தவெகவிற்கு கூடுதலாக சட்டமன்ற உறுப்பினர் தேவையில்லை. அவர்கள் கட்சியில் இருந்தவர்களுக்கு இடம் கொடுத்திருக்க வேண்டும்.

புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்த கேள்விக்கு?

முதலில் அடிப்படையை சரி செய்ய வேண்டும். சாலையை சரி செய்ய வேண்டும். மின்தடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெரிய பெரிய திட்டங்களை எடுத்தவுடன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தலைமை செயலகத்தை பொறுத்த அளவில் என்னை பொருத்தவரை திருச்சியில் வைக்க வேண்டும்.

சென்னையிலேயே கட்ட தேவையில்லை. திருச்சி தான் மையம். சட்டமன்றத்தையே வேற ஊரில் கட்டுங்கள். திருச்சியில் நடத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு துறையையும் மதுரை, கோவை, திருச்சி என பிரிக்க வேண்டும் என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN