Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 23 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 17ஆம் தேதி விமர்சையாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் கட்டணமில்லா தரிசனம் நான்கு நாட்களுக்கு அறிவித்திருந்த நிலையில் 23ஆம் தேதி இன்று வரை நீட்டித்து கோவில் நிர்வாகம் அறிவுப்பு வெளியிட்டது.
இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் கட்டணமில்லா தரிசனம் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வருகை தருவதால் கோவில் நுழைவாயில் பகுதிகளில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கைகளில் பெற்றோர்கள் பெயர் மற்றும் கைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியில் காவல்துறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN