விடுமுறையில் சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர் அடித்துக்கொலை -சாலை தகராறில் விபரீதம்
மிசோரம், 23 செப்டம்பர் (ஹி.ச.) மிசோரம் மாநிலம் கோலாசிப் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றி வந்த ஜக்காரியா லால்ரியாட்டுலுவாங்கா என்ற 29 வயது ராணுவ வீரர், அசாம் ரெஜிமென்ட்டி
கொலை


மிசோரம், 23 செப்டம்பர் (ஹி.ச.)

மிசோரம் மாநிலம் கோலாசிப் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றி வந்த ஜக்காரியா லால்ரியாட்டுலுவாங்கா என்ற 29 வயது ராணுவ வீரர், அசாம் ரெஜிமென்ட்டில் பணியாற்றி வந்தார்.

விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அவர், லெங்புய் விமான நிலையத்தில் இருந்து தனது நண்பருடன் சரக்கு வாகனத்தில் நியூ புய்லும் பகுதியில் உள்ள தனது கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஏற்பட்ட சாலை தகராறு காரணமாக அவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகராறு பின்னர் மோதலாக மாறிய நிலையில், ஜக்காரியா லால்ரியாட்டுலுவாங்கா கடுமையாக தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு, சாலை தகராறில் ராணுவ வீரர் தாக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P