கவிஞர் ராம்தாரி சிங் தின்கரின் 118-வது பிறந்தநாள் - பிரதமர் மோடி மரியாதை
புதுடெல்லி, 23 செப்டம்பர் (ஹி.ச.) புகழ்பெற்ற இந்தி கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரரும், பத்மபூஷண் விருது பெற்றவருமான ராம்தாரி சிங் தின்கரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். ராம்தாரி சிங்
கவிஞர் ராம்தாரி சிங் தின்கரின் 118-வது பிறந்தநாள் - பிரதமர் மோடி மரியாதை


புதுடெல்லி, 23 செப்டம்பர் (ஹி.ச.)

புகழ்பெற்ற இந்தி கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரரும், பத்மபூஷண் விருது பெற்றவருமான ராம்தாரி சிங் தின்கரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

ராம்தாரி சிங் தின்கர் 1908-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி பீகாரில் பிறந்தார்.

நவீன இந்தியாவின் மிக முக்கியமான இந்தி கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர், சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் தேசிய உணர்வுமிக்க கவிதைகளைப் படைத்ததற்காகப் பரவலாக அறியப்படுகிறார்.

வீர உணர்வு மிக்க பாணியிலும் தேசபக்திக் கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் அவரது படைப்புகள் அமைந்திருந்தன.

அந்த வகையில் தலைசிறந்த இலக்கிய ஆளுமையான தின்கரின் வீரமிக்க படைப்புகள் தலைமுறைகள் கடந்து தேசப்பற்றையும் சுயமரியாதையையும் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

தேசியக் கவிஞர் ராம்தாரி சிங் தின்கரின் பிறந்தநாளில் அவருக்கு எனது நூறு கோடி வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் விழிப்புணர்வு மற்றும் தேசியப் பெருமித உணர்வுகள் நிறைந்த அவரது நெருப்புமிக்க கவிதைகள் இன்றும் நாட்டு மக்களின் இதயங்களில் வீரத்தையும், உத்வேகத்தையும், சுயமரியாதையையும் ஊட்டி வருகின்றன.

அவரது படைப்புகள் இலக்கியத்தை வளப்படுத்துவது மட்டுமல்லாமல் தாய்நாட்டின் மீதான பக்தியையும் ஊக்குவிக்கின்றன.

அவரது உயர்ந்த ஆளுமையும், காலத்தால் அழியாத படைப்புகளும் வரும் காலங்களில் இந்தியர்களின் தலைமுறைகளுக்கு வழிகாட்டியாகத் திகழும்

என்று குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b