வீரமணி விவகாரத்துக்கும் தி.மு.க வுக்கும் சம்பந்தமில்லை - தி.மு.க எம்.பி. ஜெகத்ரட்சகன் பேட்டி
புதுச்சேரி, 23 செப்டம்பர் (ஹி.ச.) புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் திமுக ந
By Election


புதுச்சேரி, 23 செப்டம்பர் (ஹி.ச.)

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் திமுக நிச்சயமாக வெற்றி பெறும்.

எங்களுக்கும் வீரமணி விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் என்ன எங்கள் கட்சிக்காரரா? அவருக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?

எங்க அரசின் போது தான் அவர் மீது நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். அரசியலுக்காகவும் இந்த இடைத்தேர்தலுக்காகவும் அவர்கள் சாயம் பூசுகின்றனர்.

மேலும் திமுகவில் மூன்று பவர் சென்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் வீரமணி விவகாரத்தில் நேரடி தொடர்பில் இருப்பதாக அமைச்சரின் நிர்மல் குமார் கூறிய குற்றசாட்டிற்கு பதிலளித்த ஜெகத்ரட்சகன் எம்பி,

திமுகவுக்கு மூன்று பவர் சென்டர்கள் கிடையாது என்றும் ரெண்டு கோடி தொண்டர்கள் சென்டர் உள்ளதாகவும், திமுக பொருத்தவரை அனைவருமே தலைவர்கள் தான், எங்கள் இயக்கம் போல் இந்தியாவில் வேறு ஜனநாயகம் இயக்கம் இருக்க முடியாது.

ஒரே தலைவர் அவருக்கு அத்தனை பேரும் ஒற்றுமையாக இருப்போம். மாநில அந்தஸ்து தொடர்பாக நீதிமன்றம் சென்றால்தான் அது சாத்தியமாகும், அதனால் உச்ச நீதிமன்றத்தை அணுகி இருக்கிறோம் நல்ல தீர்பு வரும் என எதிர்பார்கிறோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மாநில அமைப்பாளர் சிவா,

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தவெக அரசை குற்றம்சாட்ட மாட்டார். மேலும் காங்கிரஸில் யார் வேட்பாளராக வேண்டும் என்கிற கேம் அவர் நடத்துகிறார்.

புஸ்ஸி ஆனந்திடம் பேசி தவெக வேட்பாளரை நிறுத்த விடாமல் செய்துள்ளார்.

அவரைப் பொறுத்தவரை யார் ஜெயித்தாலும் அவர்களை சேர்த்துக் கொள்வார். நாங்கள் தான் அவருக்கு முறையான எதிர்க்கட்சி என தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN