புதுச்சேரியில் அக்.2-ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல் -கலால் துறை உத்தரவு
புதுச்சேரி, 23 செப்டம்பர் (ஹி.ச.) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ஆம் தேதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்த
Oct 2


புதுச்சேரி, 23 செப்டம்பர் (ஹி.ச.)

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ஆம் தேதி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

அக்டோபர் 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம் மற்றும் மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுபானம் அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள மதுபானக் கூடங்களும் (பார்) அன்றைய தினம் மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அக்டோபர் 2-ஆம் தேதி அனைத்து கடைகளிலும் மதுபான விற்பனை நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மதுபான விற்பனை மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளனர்.

உத்தரவை மீறி மதுபான விற்பனை செய்தால், புதுச்சேரி கலால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலால் துறை எச்சரித்துள்ளது.

1970-ஆம் ஆண்டு புதுச்சேரி கலால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN