Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 23 செப்டம்பர் (ஹி.ச.)
சேலம் இரும்பாலை இரும்பாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு காலி மனைகளில் தினமும் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதில் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பணம் பந்தயமாக வைத்து சூதாட்டம் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சூதாட்டத்தில் ஈடுபடும் பலர் அதிகளவில் பணத்தை இழந்து வருவதாகவும், இதனால் அவர்களது குடும்பங்களின் பொருளாதார நிலை பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், காலி நிலங்களில் தொடர்ந்து கூட்டம் கூடி சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதால், அப்பகுதியில் பிற குற்றச் சம்பவங்களும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதனால், இரும்பாலை காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், காலி நிலங்களில் நடைபெறுவதாக கூறப்படும் இந்த சட்டவிரோத சீட்டாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P