இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு
சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.) திரையிசை உலகில் அரை நூற்றாண்டு கால சாதனைப் பயணத்தை நிறைவு செய்துள்ள இசைஞானி இளையராஜாவுக்கு ஆஸ்திரேலியாவின் விக்டோரியன் நாடாளுமன்றத்தில் உயரிய கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது 50 ஆண்டு கால இசை சேவையை கொண்டாடும் வகை
Special Postage Stamp Released at the Australian Parliament


சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)

திரையிசை உலகில் அரை நூற்றாண்டு கால சாதனைப் பயணத்தை நிறைவு செய்துள்ள இசைஞானி இளையராஜாவுக்கு ஆஸ்திரேலியாவின் விக்டோரியன் நாடாளுமன்றத்தில் உயரிய கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது 50 ஆண்டு கால இசை சேவையை கொண்டாடும் வகையில் சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வு தொடர்பாக இளையராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், சிறிய கிராமத்தில் பிறந்த தன்னை விக்டோரியன் நாடாளுமன்றம் வரை உயர்த்தி கௌரவித்திருப்பது மிகுந்த நெகிழ்ச்சியை தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது இசைக்கு உயிர் கொடுத்த எண்ணற்ற மக்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்ட அவர், தலைமுறை தலைமுறையாக தனது இசையமைப்புகளை வரவேற்று கேட்டு ரசித்த ரசிகர்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.

விக்டோரியன் அரசாங்கத்தின் நிதி அமைச்சர் மாண்புமிகு என்வர் எர்டோகன் எம்.பி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் இளையராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பண்ணைபுரம் என்ற சிறு கிராமத்தில் இருந்து தொடங்கிய அவரது இசைப் பயணம், இன்று ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் வரை சென்று அங்கீகாரம் பெற்றிருப்பது தமிழர்களுக்கும் இந்திய இசை ரசிகர்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாக கருதப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b