தீபாவளி பண்டிகைக்கு சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள்- முன்பதிவு தொடங்கியது
சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச) பண்டிகை கால பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காந்த
தீபாவளி பண்டிகைக்கு சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் - முன்பதிவு தொடங்கியது


சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச)

பண்டிகை கால பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை மற்றும் தீபத் திருநாளை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி, சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கு வண்டி எண் 06117 சிறப்பு ரயில் வரும் அக்டோபர் மாதம் 1, 8, 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில், அதாவது வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 11.40 மணிக்கு புறப்படும். இந்த ரயில்கள் மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லம் சந்திப்பை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து சென்னைக்கு வண்டி எண் 06118 சிறப்பு ரயில் அக்டோபர் 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில், அதாவது வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் சென்னை எழும்பூரை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்கள் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளன. பண்டிகை காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

Hindusthan Samachar / vidya.b