தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை - ரூ.1.73 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்
சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.) தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நகராட்சி நிர்வாகத்துறை அலுவலகம் உள்ளிட்ட 43 அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒ
Surprise raids by the Directorate of Vigilance and Anti-Corruption


சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நகராட்சி நிர்வாகத்துறை அலுவலகம் உள்ளிட்ட 43 அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.

ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், கணக்கில் காட்டப்படாத பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

இச்சோதனையின் போது, கணக்கில் காட்டப்படாத ரூ.13,78,207/- ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இந்த திடீர் சோதனையின் போது, ஜி-பே (G-Pay) மூலம் செய்யப்பட்ட ரூ.1,59,70,459/- மதிப்பிலான சந்தேகத்திற்கிடமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டன.

அதில் அதிகபட்சமாக அவினாசி நகராட்சி அலுவலகத்தில் 5 லட்சத்து 53 ஆயிரத்து 767 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, ஜிபே உள்ளிட்ட பண பரிமாற்ற செயலிகள் மூலம் அதிகபட்சமாக சென்னை பெருங்குடி மாநகராட்சி அலுவலகத்தில் 43 லட்சத்து 42 ஆயிரத்து 563 ரூபாய் கண்டறியப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சோதனையின் போது, அதிகாரிகள் பலர் பொதுமக்களிடமிருந்தும், ஒப்பந்ததாரர்களிடமிருந்தும் ஜிபே போன்ற டிஜிட்டல் செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லஞ்சப் பணத்தை நேரடியாக வாங்காமல், டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மூலம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்தும், ஜிபே பரிவர்த்தனைகள் குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b