உத்தரபிரதேச மாநிலத்தில் சந்தேக வாகன திருடன் என்கவுன்டரில் சுட்டுப்பிடிப்பு
பஹ்ரைச், 23 செப்டம்பர் (ஹி.ச.) உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் நள்ளிரவில் நடைபெற்ற என்கவுன்டரில் சந்தேகத்திற்குரிய வாகன திருடன் ஒருவர் காயமடைந்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினார். அவருடன் வந்த இரு க
Suspected vehicle thief shot and captured in an encounter


பஹ்ரைச், 23 செப்டம்பர் (ஹி.ச.)

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் நள்ளிரவில் நடைபெற்ற என்கவுன்டரில் சந்தேகத்திற்குரிய வாகன திருடன் ஒருவர் காயமடைந்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினார்.

அவருடன் வந்த இரு கூட்டாளிகள் தப்பி ஓடிய நிலையில், அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கைது செய்யப்பட்ட நபர் ரூபைடிஹா பகுதியைச் சேர்ந்த அப்துல் சலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

வாகன திருட்டுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையின் போது சிகனியா கால்வாய் அருகே இந்த என்கவுன்டர் நடைபெற்றுள்ளது. நேபாளத்திற்கு செல்லும் வழித்தடங்களில் போலீஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

இது குறித்து பஹ்ரைச் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வஜீத் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,

பஹ்ரைச் மாவட்டத்தில் வாகன திருடர்களுக்கு எதிரான தீவிர பிரச்சாரம் நடைபெற்று வந்தது. ரகசிய தகவலின் பேரில், நேபாளத்திற்கு செல்லும் வழிகளில் போலீசார் தடுப்பு அரண்களை அமைத்திருந்தனர். நள்ளிரவில், சிகனியா கால்வாயில் இருந்து வரும் சாலையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மூன்று நபர்கள் வருவதை கண்டோம்.

போலீஸ் குழு அவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்த இரண்டு பேர் வாகனத்தை திருப்பிக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். மற்றொரு நபர் உடனடியாக போலீஸ் குழுவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார். பதிலுக்கு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் காயமடைந்தார்

காயமடைந்த சந்தேக நபர் காவலில் எடுக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், திருடப்பட்ட இருசக்கர வாகனங்களை எல்லை தாண்டி கடத்தியதை குற்றவாளி ஒப்புக்கொண்டார். தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பல மோட்டார் சைக்கிள்களை சேகரித்து, அவற்றை விற்பனைக்காக நேபாளத்திற்கு கொண்டு சென்று கொண்டிருந்ததாக அவர் கூறினார். அவரிடமிருந்து மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என்பது இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தப்பியோடிய மற்ற இருவரையும் பிடிக்க இன்ஸ்பெக்டர் குழு தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்று காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b