Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 23 செப்டம்பர் (ஹி.ச.)
தெலுங்கானாவில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவதற்கு எல்-நினோ காரணம் அல்ல என்றும், காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்டுள்ள ‘காங்க்-நினோ’தான் காரணம் என்றும் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ஆர். குற்றம்சாட்டியுள்ளார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு ஏற்படும் என்று நாங்கள் ஏற்கனவே எச்சரித்தோம். தற்போது அதுதான் நடந்துள்ளது. காங்கிரஸ் வந்தது.
மின்சாரம் போய்விட்டது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பி.ஆர்.எஸ். ஆட்சியில் மின்சாரத்துறை சிறப்பாக செயல்பட்டது.
ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு மின்சார நிலைமை மோசமடைந்துள்ளது.
பல பகுதிகளில் தினமும் 6 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு ஏற்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதற்கு எல்-நினோவை அரசு காரணமாக கூறுகிறது. ஆனால் உண்மையான காரணம் அரசின் நிர்வாகத் தோல்விதான்.
ஜென்கோ நிறுவனத்திடம் போதிய நிலக்கரி இருப்பு இல்லை. சிங்கரேணியில் இருந்து 40 லட்சம் டன் நிலக்கரி மாயமாகியுள்ளது. நிலக்கரி கிடைத்தபோதிலும் அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தண்ணீர் இல்லை என்று கூறி நீர்மின் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு கே.டி.ஆர். கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA