தெலுங்கானா அரசு ஊழியர்களுக்கு 2 தவணை டி.ஏ. வழங்க ஒப்புதல்
ஐதராபாத் , 23 செப்டம்பர் (ஹி.ச.) தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அகவிலைப்படியை (டி.ஏ.) வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 2 தவணைகளாக டி.ஏ. வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் ஊழியர
A


ஐதராபாத் , 23 செப்டம்பர் (ஹி.ச.)

தெலுங்கானா மாநில அரசு ஊழியர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அகவிலைப்படியை (டி.ஏ.) வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 2 தவணைகளாக டி.ஏ. வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 2 டி.ஏ.க்களை வழங்க அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி முதல் தவணை டி.ஏ. அக்டோபர் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்.

இதனால் நீண்ட காலமாக அகவிலைப்படிக்காக காத்திருந்த அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைக்க உள்ளது.

மேலும், 2-வது தவணை டி.ஏ.வை உகாதி பண்டிகையையொட்டி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு 2 தவணைகளில் அகவிலைப்படி பலன் கிடைக்கும்.

இதற்கிடையே, அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் ஊதிய திருத்த ஆணையம் (பி.ஆர்.சி.) தொடர்பாக அரசு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

பி.ஆர்.சி.யை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், டி.ஏ. வழங்குவதற்கு மட்டும் அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால் பி.ஆர்.சி. குறித்து அரசு எப்போது முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA