தாராபுரம் இடைத்தேர்தல் - வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு தொடக்கம்
திருப்பூர், 23 செப்டம்பர் (H.S.) திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு


திருப்பூர், 23 செப்டம்பர் (H.S.)

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாராயணவரே தலைமையில் நடைபெற்றன.

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த சரிபார்ப்பு பணியில், தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டன.

மேலும், தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையிலும் இந்த முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தாராபுரம் இடைத்தேர்தலுக்கான அடுத்தகட்ட தேர்தல் பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்பு பணிகளும் தேர்தல் விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P