Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாடு பாஜக மாநில பொறுப்பாளராக ராம் மாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் மாநில இணை பொறுப்பாளர்களாக நிர்மல் குமார் சுரானா மற்றும் கே. அருணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். பாஜக தேசிய துணைத்தலைவராக உள்ள ராம் மாதவ், கடந்த 2014 முதல் 2020-ஆம் ஆண்டு வரை தேசிய பொதுச்செயலாளராகப் பதவி வகித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக தனது அமைப்புப் பணியைத் தொடங்கிய ராம் மாதவ், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு பாஜக தேசிய அளவிலான அமைப்புப் பணிகளில் முக்கியப் பங்காற்றினார்.
குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் அமைப்பு விரிவாக்கப் பணிகளில் அவர் செயல்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக - பிடிபி கூட்டணி உருவானதிலும் ராம் மாதவின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
மேலும், 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மேலிடப் பொறுப்பாளராகவும் அவர் செயல்பட்டார்.
இந்நிலையில், 2026-ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய நிர்வாகிகள் குழுவில் மீண்டும் முக்கியப் பொறுப்புக்கு வந்த ராம் மாதவுக்கு தற்போது தமிழ்நாடு மாநில பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், ஆந்திர மாநில பாஜக இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், பிற மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களை மாற்றி பாஜக தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ