சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 3-ம் தேதி 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சி - ராகுல் காந்தி பங்கேற்பு
சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.) அக்டோபர் 2029 மக்களவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு, கல்லூரி மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களின் குரல் எனும் கலந்துரையாடல் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்
'Voice of Students' event at Chennai's Island Grounds on October 3 – Rahul Gandhi to participate.


சென்னை, 23 செப்டம்பர் (ஹி.ச.)

அக்டோபர் 2029 மக்களவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு, கல்லூரி மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களின் குரல் எனும் கலந்துரையாடல் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்.

டெல்லி, புனே மற்றும் செப்டம்பர் 19 அன்று மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து, இந்த இயக்கத்தின் அடுத்த மாபெரும் நிகழ்வு தமிழகத்தில் அக்டோபர் 3-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.

அந்த வகையில் வரும் அக்டோபர் 3-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.

சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி மாணவர்களுடன் நேரடியாக உரையாட உள்ளார். தற்போதைய கல்விச் சூழல், வேலைவாய்ப்பில் உள்ள சவால்கள், நாட்டின் எதிர்காலம் குறித்த இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மாணவர்கள் தங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி வெறும் அரசியல் கூட்டமாக இல்லாமல், மாணவர்களின் எண்ணங்களுக்கும் குரலுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஒரு ஜனநாயக மேடையாக அமையும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b