Enter your Email Address to subscribe to our newsletters

லண்டன் , 23 செப்டம்பர் (ஹி.ச.)
இங்கிலாந்து–இலங்கை அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளும் ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அந்த அணியில் வில் ஜாக்ஸ் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் பெர்னாண்டோ, சச்சிந்து கொலம்பகே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கம் முதலே விக்கெட்டுகள் சரிந்தன. அந்த அணி 37 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணியில் துனித் வெல்லாலகே அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து தரப்பில் வில் ஜாக்ஸ் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் இங்கிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்
1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA