விசாய்பி மாநில பிரசார பிரிவு தலைவர் ராஜசேகர் திடீர் மரணம்- ஒய்.எஸ்.ஆர் ஜெகன்மோகன் ரெட்டி அதிர்ச்சி
ஐதராபாத் , 24 செப்டம்பர் (ஹி.ச.) ஆந்திர மாநில முன்னாள் லிட்கேப் தலைவர் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில பிரசார பிரிவு தலைவராக இருந்த காகுமனு ராஜசேகர், மாரடைப்பு காரணமாக இன்று காலை திடீரென உயிரிழந்தார். ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில
A


ஐதராபாத் , 24 செப்டம்பர் (ஹி.ச.)

ஆந்திர மாநில முன்னாள் லிட்கேப் தலைவர் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில பிரசார பிரிவு தலைவராக இருந்த காகுமனு ராஜசேகர், மாரடைப்பு காரணமாக இன்று காலை திடீரென உயிரிழந்தார்.

ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது ராஜசேகருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதில் அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அதிர்ச்சி அடைந்தார்.

ராஜசேகரின் குடும்பத்தினருக்கு அவர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில்,

கட்சிக்காக ராஜசேகர் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். கட்சியின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சுறுசுறுப்பாக பங்கேற்று, அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நம்பிக்கையுடனும், அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றினார்” என்று நினைவுகூர்ந்தார்.

மேலும், ராஜசேகரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும், அவரது குடும்பத்தினர் இந்த துயரத்தை தாங்கிக்கொள்ள தேவையான மனவலிமையை இறைவன் வழங்க வேண்டும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA