ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் ஜெகனுடன் இருப்பதாக அமைச்சர் லோகேஷ் குற்றச்சாட்டு
விஜயவாடா , 24 செப்டம்பர் (ஹி.ச.) விஜயவாடாவில் ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ரவுடி ஷீட்டர்களுடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தொடர்பு இருப்பதாக ஆந்திர மாநில கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்தி
A


விஜயவாடா , 24 செப்டம்பர் (ஹி.ச.)

விஜயவாடாவில் ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ரவுடி ஷீட்டர்களுடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தொடர்பு இருப்பதாக ஆந்திர மாநில கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி நாரா லோகேஷ் குற்றம்சாட்டி உள்ளார்.

விஜயவாடாவில் உள்ள சாப் அலுவலகம் அருகே கடந்த திங்கட்கிழமை ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் சிலரின் புகைப்படங்களை லோகேஷ் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

மேலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் வீடியோக்களையும் அவர் பகிர்ந்தார்.

பணுகண்டி சைதன்யா, எஸ். சந்தீப், ஆவுடு சீனிவாசரெட்டி, பங்கா அருண் உள்ளிட்ட பலரது பெயர்களை லோகேஷ் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் ஜெகன்மோகன் ரெட்டியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட அவர், ஆசிரியர்கள் மீதான தாக்குதலில் தொடர்புடையவர்கள் என குற்றம்சாட்டினார்.

மேலும் லோகேஷ் தனது பதிவில், “நான் ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் பக்கம் நிற்கிறேன். ஜெகன் ரவுடிகளின் பக்கம் நிற்கிறார்.

நீங்கள் ஆசிரியர்களின் பக்கம் நிற்கிறீர்களா? அல்லது ரவுடிகளின் பக்கம் நிற்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA